இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Friday, March 14, 2014

உலக வரலாற்றில் காணாமல் போன, விபத்துக்குள்ளான விமானங்கள்உபாலி முதல் மலேசியன் ஏர்லைன் வரை.. விறுவிறுப்பான ஒரு ஆய்வு.
சமீப நாட்கள் இருந்து உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எல்லோரின் பிரார்த்தனைகளிலும் இடம்பிடித்த ஒரு விடயம் என்றால் அது, மலேசியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காணாமல் போன விடயம்தான். உலகின் ஒருசாரார் இந்த விமானம் கடத்தப்பட்டு விட்டது என்றும் இன்னுமொரு சாரார் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்றும் வாதிட்டுகொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மை என்னவென்று கண்டறிய பலநாட்டு இராணுவ வீரர்களும் மீட்புக்குழுக்களும் களத்தில் இறங்கி தேடிக்கொண்டிருக்கின்றனர்.

விமானம் உருவாக்கப்பட்டு அது சேவையில் விடப்பட்ட நாளிலிருந்து இன்றுவரையும் எத்தனையோ ஆயிரம் விமான விபத்துக்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன அவைகளைப்பற்றி அந்தந்த நேரங்களில் மட்டும் நாம் பேசிவிட்டு மறந்து விடுகிறோம்.அவ்வாறே இப்போது காணாமல் போயிருக்கும் விமானத்தையும் கொஞ்சநாள்வரை பரபரப்பாக பேசிக்கொண்டிருந்துவிட்டு மறந்துவிடும்வோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வீதி விபத்துகளைவிட விமான விபத்துக்கள் மிகவும் கொடூரமானவை காரணம், வீதியில் விபத்து ஏற்பட்டால் சடலமாவது கிடைக்கும் ஆனால் விமானவிபத்து ஏற்படும்போது மிகவும் அரிதாகவே உடல் எச்சங்களும் மீட்கப்படுகின்றன. வீதி விபத்துக்களைபோன்று விமான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படாவிட்டாலும் எப்போதாவது இருந்து அந்த விபத்துக்கள் ஏற்படும்போது அதிகமான உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

வரலாற்றில் அதிகமான விமான விபத்துக்கள் உலகப்போர் நடைபெற்ற காலங்களிலேயே இடம்பெற்றுள்ளது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் விமான விபத்து 1925ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது USS Shenandoah, என்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பயணிகளும் கொல்லப்பட்டனர். இதுவே உலகின் மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியுள்ளதுடன் அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் விமான விபத்துக்கள் அதிசயமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது பின் வந்த காலங்களில் அவை பழக்கப்பட அதுவே எல்லோருக்கும் பழகிப்போயும் விட்டது.

விமானங்களை நாம் இரண்டு வகையாக பிரிக்க முடியும் முதலாவது வகை போர் விமானங்கள் மற்றவகை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் இங்கு நாம் பேசப்போவது பயணிகள் விமானங்கள் பற்றியே. ஏனெனில் இந்த மாதிரியான விமானங்களின் விபத்தில்தான் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

பொதுவாக விமானங்கள் மேலே ஏறும்போதும், கீழே இறங்கும்போதும்தான் அதிகமான விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது அதனை தவிர மேலே விமானங்கள் பறக்கின்ற போது ஏற்படுகின்ற விபத்துக்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றது. அதிலும் விமானம் காணாமல் போதல் என்கின்ற ஒரு விடயம் அதிசயமான ஒன்றாகவே நோக்கப்படுகின்றது. எப்படியான விமான விபத்துக்கள் ஏற்பட்டாலும் சில நாட்கள் கழித்து அதற்க்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவது இயல்பானது. அதற்கு மாற்றமாக சில திட்டமிடப்பட்ட செயல்கள் மூலம் நடக்கின்ற விமான விபத்துகளின் காரணங்களை கண்டறிதல் என்பது அபூர்வமானது, இதற்கு சிறந்ததொரு உதாரணம் இலங்கையின் மிகப்பிரபலம் வாய்ந்த கோடிஸ்வரர் உபாலி அவர்களின் மறைவு விமான விபத்தில் கொல்லப்பட்ட உபாலி அவர்களின் உடல் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை அந்த விமான விபத்து நடந்து 31 வருடங்கள் நிறைவு பெறப்போகின்றன. உபாலி அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கொழும்பிற்கு வந்துகொண்டிருந்த சமயம் அந்த விபத்து இடம்பெற்றது.

அதே போன்று சுதந்திர வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் விமான விபத்தில் கொல்லப்பட்டிருந்தார். அவரின் உடலும் இதுவரையில் கிடைக்கவும் இல்லை அந்த விபத்திற்கான காரணம் கண்டறியப்படவும் இல்லை. இப்படியான விபத்துக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்கின்ற முடிவுக்குத்தான் ஒவ்வொருவரும் வரவேண்டியுள்ளது.

பயணிகள் விமானங்கள் விபத்துக்குள்ளாகும்போது அந்த விபத்திற்கான காரணிகள் காலம் தாழ்த்தியாவது கண்டுபிடிக்க படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு.. பலவித பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த விமானங்கள் எப்படி விபத்துக்குள்ளாகின்றன என்பது எல்லோரின் இதயத்திலும் எழக்கூடிய சாதாரண ஒரு கேள்வியாக இருக்கின்றது.

விமானத்தில் ஏற்படுகின்ற தொழிநுட்ப கோளாறுகள்

விமானம் பறக்கும் போது பறவைகள் மோதுதால் - இவ்வாறான சம்பவங்கள் நடப்பது அரிது ஏனெனில் 36000 அடி உயரத்தில் எந்த பறவையும் பறக்காது. விமானம் கீழே இறங்க முயற்சிக்கும் போதுதான் பறவைகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது.

விமான ஓட்டியின் கவனக்குறைவு - பல சமயங்களில் Auto Mode இல் விமானத்தை பறக்க விட்டு விட்டு விமான ஓட்டிகள் உறங்கிவிடுகிறார்கள்.

அடுத்த முக்கியமான ஒரு காரணம் வானிலை மாற்றங்கள்.

மேலே சொல்லியவற்றில் மூன்று காரணங்களை கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும்.ஆனால், கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை தவிர்ப்பது கடினம்.நான்காவது காரணத்தால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம். ஆனால் எரிபொருள் செலவு விமான நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரும். அதனால் எந்த விமான நிறுவனமும் அதற்கு முன்வராது அதிகமான லாபத்தை எதிர் பார்த்தே விமான நிறுவனங்கள் பயணிகளின் உயிரை பணயம் வைக்கின்றன.

வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர், அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது. மேகமூட்டம், மழை, மேலும் பிற வானிலை மாற்றங்கள் துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம். இந்த அடுக்கில் பறப்பது கரடு முரடான சாலையில் பயணம் செய்வது போன்றது .மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன் பாதிக்கப்படும். ஆனால்அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் . எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் தள்ளு காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போல் அதாவது தள்ளு காற்றில் விமானத்தை ஓட்டினால் எரிபொருள் பெருமளவு மிச்சப்படும்.

மேலும் ஒரு வானியல் சிக்கலும் அங்கே இருக்கு அதுதான் பலவிமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது.. அப்படிப் பறப்பது கரணம்தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன. இதனாலே பல விபத்துக்கள் ஏற்பட்டு நாம் உயிர்களை இழக்க வேண்டியுள்ளது அதைப்பற்றி விமான நிறுவனங்களுக்கு கவலையில்லை அவர்களுக்கு இலாபம் கிடைத்தால் போதுமானது.

பரந்து விரிந்த ஆகாயத்தில் கண்டபடிக்கு விமானத்தை செலுத்த முடியாது. அதற்காகவே பாதைகள் வகுக்கப்பட்டுள்ளது அந்த பாதைகள் ஊடே விமானம் பயணிக்கின்றது 35000 அடிகளுக்கு மேலேதான் பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது இங்கு ஆபத்துக்கள் அதிகம். திடீர் காற்றழுத்தம், வெற்றிடம் என்பவற்றால் விமானம் குலுங்கும் இதை விமானத்தில் பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள. காற்றில்லாத வெற்றிடங்களில் விமானத்தின் எஞ்சின் அணைந்து போய் விடும் விமானியின் திறமையில் இருக்கிறது எஞ்சின் உயிர்பெறுவதும் அப்படியே முற்றாக அணைந்துபோய் விபத்து ஏற்படுவதும்.

http://ametia.files.wordpress.com/2014/03/missing-malaysia-airline-flight.gif 
அடுத்து இன்னுமொரு முக்கிய விடயம் அந்த விமானத்தில் கொண்டு செல்லப்படும் மொத்த நிறை அந்த விமான எடையின் மூன்றில் ஒரு பங்காக இருக்கவேண்டும் உதாரணமாக 450 தொன் எடையுள்ள ஒரு விமானத்தில் 150 தொன் எடையை மட்டுமே ஏற்ற வேண்டும் எஞ்சின் திறனுக்கு சமனாக எடை இருந்தால் அந்த விமானம் தாங்காது அதனால்தான் ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேலதிகமாக எடையை கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கபடுவதில்லை.

இப்படி முக்கியமான காரணங்களை நாம் கோடிட்டு காட்ட முடியும்.. அண்மைக்காலமான விமான விபத்துகளை நாம் கொஞ்சம் நோக்கலாம்..


2009 ஜூன் முதலாம் திகதியில் இருந்து இற்றைக்கு வரையான காலப்பகுதியில் உலகின் பல நாடுகளிலும் இருந்து மிக மோசமான 15 விமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது அவைகளின் பட்டியல் இது.

2009 ஜூன் 1:

பாரிசிலிருந்து ரி யோடி ஜெனிரோவிற்கு பறந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்லான்டிக்கடலில் விழுந்ததில் 228 பயணிகள் உயிரிழந்தனர்.

2009 ஜூன் 30:

கெமரோஸ் நாட்டின் கடல் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்ததில் 150 பேர் உயிரிழந்தனர்.

2009 ஜூலை 15:

ஈரானின் குவாஸ்வின் நகரில் நேரிட்ட விமான விபத்தில் 168 பேர் உயிரிழந்தனர்.

2010 ஜன 25:

லெபனானின் பெய்ரூட் அருகே எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர்.

2010 ஏப். 10:

ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜியான்ஸ்கை உள்பட 97 பேர் பலியாகினர்.

2010 மே 12:

லிபியாவின் திரிபோலி நகரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 103 பேர் உயிரிழந்தனர்.

2010 மே 22:

இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2010 ஜூலை 28:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் விமானம் மலையில் மோதி 152 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜன. 10:

ஈரானின் யுரேமியா நகரில் நேரிட்ட விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜூலை 8:

கொங்கோவின் கிஷான் கனி நகரில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையில் விழுந்து 74 பேர் உயிரிழந்தனர்.

2011 செப். 7:

ரஷ்யாவின் யாரோஸ்லாவல் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

2012 ஏப்ரல் 20:

இஸ்லாமாபாத் அருகே நேரிட்ட விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர்.

2012 மே 9:

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் 45 பேர் இறந்தனர்.

2012 ஜூன் 3:

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 153 பேர் கொல்லப்பட்டனர்.

2013 ஜூலை 6:

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தென் கொரியாவின் போயிங் 777 ரக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக் குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காய மடைந்தனர்.

இந்த விமான விபத்துக்கள் அனைத்தும் தரையில் நடந்தவை இதற்க்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகவே கண்டறியப்பட்டன. ஆனால் இப்போது தேடப்பட்டுக்கொண்டிருக்கும் MH370 என்கின்ற விமானத்தை போலவே 2009ம் ஆண்டு ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானமும் பிரேசிலுக்கு சென்று கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியான தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 228 பயனிகளுள் 50 பேரின் உடல்கள் மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டன ஏனையவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.

கடந்த 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள், மர்ம பிரதேசம் என்று புவியியல் வல்லுனர்களால் அழைக்கப்படும் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது அந்த விமானமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது 50 ஆண்டுகள் கழித்துதான் அது பனிப்புயலில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது.

1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான். அதை பற்றி ஒரு தகவல் கூட இன்னும் கிடைக்கவில்லை.

அந்த விமானத்தின் விபத்தை போன்று இப்போது காணாமல் போயிருக்கும் விமானமும் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். எது எப்படி விசாரணைகளும் தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும். எல்லாம் அறிந்த ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.


No comments:

Post a Comment