இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Thursday, February 20, 2014

ராஜீவ் காந்தி கொலை - நிரபராதிகள் விடுதலை - குற்றவாளிகள் இன்றைய இந்தியாவின் பெரும் புள்ளிகள்


" நிரபராதிகள் தூக்கிலிடப்பட கூடாது "
" குற்றவாளிகள் என சந்தேகப்படும் சில சாமிகள் வெளியில் இருக்க கூடாது "


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை என்றே பெரும்பாலான தமிழ் மற்றும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும், சிலரின் தேவைக்காக சிறை வைக்கப்பட்டனர் என்பதே எனது கருத்து.
விடுதலை செய்யப்படவுள்ள இந்த எழு பேரில் அதிகம் பேசப்பட்டது, 
முருகன் - நளினியின் காதல். 

இவர்களது வாழ்கை வரலாற்றை எனது மேற்படிப்புக்காக இந்திய சென்றிருந்த போது நண்பன் ஒருவனின் புத்தகத்தை இரவல் வாங்கி படித்து அறிந்து கொண்டேன்.

நளினி கைது செய்யப்படும் போது கர்பிணியாக இருந்தாள். ஈவு இரக்கமின்றி ஒரு நிறை மாத கர்ப்பிணியை கொடுமை படுத்தியது பெண்ணை தெய்வமாக போற்றும் தமிழகம். உண்ணக் கூட உணவு வழங்காமல் பட்டினி போட்டனர். சிறையில் பெண் கைதிகள் பகுதியில் கடமையிலிருப்பவர்களும் பெண் அதிகாரிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

" ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்கு தெரியும் "
"இளகிய மனம் கொண்டவர்கள் பெண்கள் "
இந்த செயலின் பின் எல்லாமே பொய்த்து போனது.


தன் மனைவியின் நிலையை அறிந்த முருகன் என்ன செய்வது என்று தெரியாமல் உண்ணா விரதத்தில் இருந்தே தன் மனைவிக்கான உணவினை பெற்றுக் கொடுத்தார். இல்லையெனில் இன்று நளினியும் இல்லை, அரித்திராவும் இல்லை. ஆம் முருகன் - நளினிக்கு பிறந்தவள் தான் அரித்ரா. குறித்த தேதிக்கு முன்னதாகவே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பலவீனமாக இருந்தார்கள்.

மாற்றுத் துணியோ, உணவோ எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன் என்று முருகன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.

சிறை அதிகாரி ஒருவர் நளினியின் நிலையைப் பார்த்து குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார். கேட்க அது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி.

அரித்ராவுக்கு இரண்டரை வயதான போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே, பசு மாட்டை ஆச்சரியமாகப் பார்த்த அரித்ராவின் எதிர்காலம் குறித்து நளினிக்கு அச்சம் கொண்டதினால், இந்த வழக்கில் சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார் அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து இலங்கை சென்ற அரித்ரா, பிறகு லண்டன் சென்றாள். தற்போது அவளுக்கு வயது 22.

தனி தனி சிறைகளில் ஒரு காதல் ஜோடியின் திணிக்கப்பட்ட பிரிவு தங்க முடியாத வேதனையை இருவருக்கும் கொடுத்திருக்கும். இவர்கள் வாழ்வின் எந்தச் சந்தோஷங்களையும் காணாத போதும் இறுதி காலத்தை தனது மகளுடன் லண்டனில் வசிக்க ஆசை கொண்டுள்ளனர் இருவரும்.

திருமணமாகி முழுமையாக ஒரு மாதம் கூட  இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை. இனிவரும் காலம் இருவருக்கு இனிமையாக அமைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.  

No comments:

Post a Comment