இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !!

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !!
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

 
ஒரு நாள் உணவு வழங்க USD $ 200 (டொலர்) மட்டுமே!1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள். 

3.காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள்.
எமது இல்லம் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றது.

தற்போது எமது பராமரிப்பில் 108 பெற்றோரை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமம், செட்டிபாளையம் ஆகிய இரு இடங்களிலும் உள்ள எமது திலகவதியார் மகளிர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.

இக் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, உடை, தங்குமிடம், சுகாதாரம் போன்ற அனைத்து தேவைகளையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வழங்கி இவர்களை பராமரித்து வருகின்றோம்.

இக் குழந்தைகளை பராமரிக்கும் பணிக்கு தற்போது எமக்குக் கிடைக்கின்ற நன்கொடைகள் போதாமையினால் நாம் தொடர்ந்து பல கஸ்ரங்களை எதிர்நோக்குகின்றோம்.

எனவே இக் குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்குமாறு தங்களை மிக்க தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”
நன்றி.