இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Tuesday, December 28, 2010

கிழக்கில் கொட்டுகிறது அடை மழை.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கொட்டிய மழையால் மக்கள்  பாடசாலைகளிலும் கோவில்களிலும் இடம் பெயர்ந்து உள்ளனர்.


வீதிகளில் நடமாட முடியாத  அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்க சமூக ஆர்வலர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, December 27, 2010

ஸ்கைப்க்கு நடந்தது என்ன.....?

சில நாட்களாக பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா....?
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல...!
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வெகு விரைவில் வழமைக்கு திரும்பும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா வான் தாக்குதல் 18 பேர் பலி

இன்று அதிகாலை (27.12.2010)  ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியமான வஸிரிஸ்தானில் ஐ.நா.வின் அனுமதிக்குப் புறம்பாக இடம்பெற்ற அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 18 பாகிஸ்தானியப் பொதுமக்கள் பலியானார்கள்.


அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது ஐந்து ஏவுகணைகள் எறியப்பட்டதாகவும், வடக்கு வஸிரிஸ்தானின் மீர் அலி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய வான்வழி ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாலிபான் படையணியினரை இலக்காகக்கொண்டே இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ள போதிலும், இத்தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தைப் பாகிஸ்தானியப் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய நியாயமற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

Thursday, December 23, 2010

விக்கிலீக்ஸினால் ஏற்படபோகும் இன்னுமோர் உலக மகா யுத்தம்.அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் உருவாக்கிவிட்டிருக்கும் பரபரப்பு இன்னும் தணியவில்லை.விக்கிலீக்ஸிற்கும் அதன் நிறுவுனர் Julian Assange ற்கும் ஆதரவாகவும் எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டின் உள்விவகார தகவல்களை திருடுவது. அதனை வெளியிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போதைய சுழல், எல்லையற்ற இணையம்,கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் Wikileaks ற்கும் அதன் நிறுவுனரிற்கும் ஆதரவான குரல்களும் , இதனைத் தொடர்ந்து அனுமத்தித்தால் நாடுகளின் இரகசிய உள்வீட்டுத் தகவல்கள் எல்லாம் வெளிப்படைத் தன்மையின் பெயரால் சென்றடையக் கூடாதவர்களிற்கெல்லாம் சென்றடைந்து தீவிரவாதிகளை ஊக்குவிக்கும், இறுதியில் நாடுகளிடையில் குழப்பங்களை உருவாக்கி இன்னுமோர் உலக யுத்தத்திற்கு வழிவகுத்துவிடும் Wikileaks ற்கும் நிறுவுனர் Assange ற்கு எதிரான குரல்களும் பரவலாக  எழுந்தவாறுள்ளன.
இலங்கை சமந்தமான 3000 தகவல்களும் உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

எது எப்படியோ தீவிரவாதிகளுக்கு நிறையவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

Tuesday, December 21, 2010

" இன்னும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை " - மகிந்த ராஜபக்ஷ" - இன்னும் முடியலையா...!!!

  இலங்கை குறித்த எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்க அரசாங்கத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் தியத்தலாவையில் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 253 உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு வைபவம் தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


“என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி அப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் தான் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக அர்த்தம்.
யுத்தத்தால் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும் போராடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்” என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில்....
நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்களுக்கு இராணுவத்தினர் உட்பட்டவர்கள். இந்த நிலையில் இராணுவத்தினர் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளையும் அவர்கள் அனுபவித்துத் தானாக வேண்டும்.
அதற்காகப் பழிவாங்கும் எண்ணத்துடன் மனிதாபிமானத்துக்கு எதிராக எவருக்கும் தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்னார்.

Monday, December 20, 2010

அமெரிக்காவின் போர் குற்றங்கள்....! இதை யாரு கேட்பார்கள்.....?

http://www.youtube.com/watch?v=kelmEZe8whI&feature=player_embedded

- அமெரிக்காவின் போர் குற்றங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் -

ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவரையும் ஆயுத தாரிகள் என பொதுமக்களுடன் சேர்த்து விமானத்தில் இருந்து சுட்டுத்தள்ளும் காட்சிகளும் மனதை பதற வைக்கின்றன. ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. எனினும் விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை உலகத்தின் பார்வைக்கு கடந்த ஏப்ரலிலியே வைத்திருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் நேரடி சாட்சியமளிப்பும் இருக்கிறது.


சாட்சியம் அளிப்பில் மேலும்....
          "யாராயின் நீங்கள் கண்டு அஞ்சுபவரை சுடலாமென அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் அனைவரையும் அச்சம் தருபவர்களாகவே இருந்தார்கள் அனைவரையும் சுட்டோம்.

"360 டிகிரியில் சுழற்சியாக கண்டவர்களை எல்லாம் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டோம்."

வீதிகளில் காணுபவர்களை எல்லாம் சுட உத்தரவு பிறப்பித்தார்கள். இது தினமும் நடந்தது. வான் ஒன்றில் குழந்தைகள் மற்றும் அங்கிருந்தவர்களையும் விமானத்திலிருந்தே சுடப்பட்டதையும் நான் நேரிலே கண்டேன்.

அவர்கள் மீண்டும் மீண்டும் சுடப்பட்டதை நான் கண்டேன். வான் இற்கு அருகில் சென்றதும் 7வயது சிறுவன் உள்ளே. முன்பக்கத்தில் அவனது தந்தை தப்பித்திருக்க சந்தர்ப்பமே இல்லை ஒரே இரத்த வாடை. மேலும் உள்ளே இருந்த மற்றொரு சிறுமி காயப்பட்டிருந்தால் அவளுக்கு மருத்துவ உதவியை கோரினேன்.

மீண்டும் வானுக்கு அருகில் வந்தேன் சிறுவன் அசைவதை பார்த்ததும் சிறுவனும் உயிருடன் இருக்கிறான் என கத்தினேன்.

என்று தொடர்கிறது அவரது வாக்குமூலம்

பிரிட்டன் - இலங்கை அரசுக்களிடையே தொடரும் தீவிர இராஜந்ததிர முறுகல்....?பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கை ஜனாதிபதிக்கு
அறிவுரை கூறி அனுப்பிய கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு பிரசுரிக்கப்படாமல் மறுக்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையில் நல்லாட்சி நிலவவேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பின் போது பிரித்தானிய பிரதமர் இக்கடிதத்தை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மகாராணியாரிடமிருந்து மாத்திரமே கடிதம் வந்ததாகவும், அதை பிரசுரித்துவிட்டதாகவும், வேறு கடிதங்கள் வரவில்லை எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனாலேயே பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை விஜயத்தை இரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் இலங்கை - இங்கிலாந்து இராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் தனது பதவிக்காலம் முடிந்து செல்லும் பிரித்தானிய உயர்ஸ்த்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் இந்த வார காலை உணவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த போதும், ஜனாதிபதி அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா விஜயத்தின் போது புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு குறித்து லண்டன் அமைதியாக இருந்ததே இந்நிராகரிப்புக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

எனினும் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டமை தொடர்பில் இலங்கையின் லண்டனில் உள்ள உயர்ஸ்த்தானிய அதிகாரிகள், பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரை இந்த வாரம் சந்திக்கவுள்ளனர். அவர்கள் பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்களையும் கோரியிருந்தனர்.
இந்நிலைமைகள் இவ்வாறிருக்க இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விஜய் நம்பியாரை பர்மாவுக்கான தற்காலிக தூதுவர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் எனவும் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. அவர் சிறுபான்மை இனங்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார் என அது குற்றம் சாட்டியுள்ளது.

விக்கிலீக்ஸ்


     2009 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வின் வெற்றியையே அமெரிக்கா விரும்பி உள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகி உள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த ஆவணத்தை வெளிவிட்டு உள்ளது. இதில் பொன்சேகாவுக்கும், பொன்சேகாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கின்றார் அமெரிக்க தூதுவர்.

மனித உரிமைகள், அகதிகள், அரசியல் இணக்கப்பாடு,யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்சேகா வழங்கி உள்ளார் என்றும் பொன்சேகாவின் அரசு ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஸ அரசை விட இவ்விடயங்களில் மிகவும் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்க முடியும் என்றும் தூதுவர் குறிப்பிட்டு உள்ளார்.

விக்கிலீக்ஸ்

       இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்பபில்லை என்றும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NewsOne அனைவரையும் வரவேற்கின்றது

வெகு விரைவில் தரவேற்றம் செய்யப்படும்.
எங்களுடன்  இணைந்திருங்கள்.