இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

மைத்திரியின் கவிதைகள் : காதல் காதலிக்கப்பட்டால் !

ஆண்மை பெண்மை கொள்ளும்.!
பெண்மை மேன்மை கொள்ளும்..!!
விழியூடே விழி புகுந்து விசும்பல்கள் கொள்ளும்..!!
கைக்கெட்டும் தூரத்தில் பவுர்ணமி தெரியும்.!
காமத்தின் கைகள் விலங்கிட்டுக் கொள்ளும்..!!
இதயம் தூரிகை எடுக்கும்.!
உடல் மட்டும் விலக்கி, காதலை வரையும்..!!
கணுக்கால் தெரிந்தினும், சலங்கை மட்டும் ரசிக்கும்.!
காதினூடே சிரிக்கும் கம்மலும் தெரியும்..!!
ரோஜாவில் பனித்துளி போல் மூக்குத்தி மின்னும்.!
கொவ் விதழ்களின் விளிம்பில், வார்த்தைகள் தள்ளாடும்..!!
பாற் றேகம் உட் புகுந்த ஆடைமட்டும் ரசிக்கும்.!
பாலாடை விலக முன் ''நீர்'' ஆடை ''அணி'' எங்கும்..!!
உடனும் புள்ளி மான் ஒன்று துள்ளி ஓடும்.!
பரிதாப முகத்தில் பல ஏக்கங்கள் தெரியும்..!!
ஆடிக் காற்றிலும் மெல்லிசை உரசும்.!
அடித்தடத்தின் மேல் மட்டும் இன்னொரு பாதம் பதியும்..!!
நிழல்களை மட்டும் நிஜங்கள் தொடும்..!!
இப்படி கற்பனைக் கெட்டாத கவிதையும் வரும்..!!
காதல் காதலிக்கப்பட்டால்.....

:- மைத்திரி

No comments:

Post a Comment