இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Saturday, March 26, 2011

மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை. த.தே.கூ - இலங்கை அரசு

 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இலங்கை அரசகும் இடையிலான பேச்சு வார்த்தை கடந்த ஜனவரியில் இருந்து நடை பெறுவது யாவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் என்ன நடக்கின்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி இலங்கை அரசும் சரி இதுவரை என்ன விதமான பேச்சுகளை முன்னெடுக்கின்றது என்பதை தெரிவிக்காமல் தங்கள் அரசியலை முன்நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மா.வை.சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் இலங்கை அரசு சார்பில் நிமால் ஸ்ரீபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், ரத்னா ஸ்ரீ விக்கிரமநாயக ஆகியோரும் பேச்சு வார்த்தையை முன்னெடுக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு கொள்வதும், பேச்சு வார்த்தை பற்றி தமிழ் மக்களுக்கு கருத்து தெரிவிக்காததையிட்டு ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தில் இருப்பதாகவும் தவல்கள் கசிந்துள்ளது.

இலங்கை அரசானது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேச்சு வார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவருடனும் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கு முட்டுக்கட்டையாக டக்ளஸ் தேவானந்தாவை வைத்து காய்களை நகர்த்தி வருகின்றது இலங்கை அரசு. இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளின் படி எவ்விதமான உருப்படியான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே உண்மை. இப்பேச்சு வார்த்தை தொடங்கும் போது மாதம் இரு கூடி ஆராய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இரண்டு தடவைகள் மாத்திரமே இப்பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. முதல் பேச்சு 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மொத்தமாக இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் 2,3 மணி நேரம் தான் இடம்பெற்றது. 30 வருடத்திற்க்கு மேற்பட்ட உரிமை போராட்டத்ததை 2,3 மணி நேரத்தில் பேசி முடிக்க நினைத்தார்களோ என்னவோ...!!


இப்பேச்சு வார்த்தை முலம் இலங்கை அரசுக்கு என்ன இலாபம்...?

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக சர்வதேசத்துக்கு காட்டி நற்பெயரையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும் போக்க அரசு முனைப்பு காட்டுகின்றது. அந்த வகையில் மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்க தூதுவரை சந்தித்த போது இதனை பெரிய விடயமாக எடுத்து கூறியதும், போருக்கு பின் நல்லிணக்க முயற்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஐக்கிய நாடுகள் செயலரிடம் எடுத்து கூறியும், ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திலும் இது பற்றி கூறியும், இந்தியாவிடமும் அப்படியே கூறியும் தன் மீதுள்ள களங்கத்தை போக்கியும், அபிவிருத்திக்காக கடன்களை பெறவும் இலங்கை அரசு முனைகிறது.இப்பேச்சு வார்த்தை முலம்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்ன இலாபம்...?

இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், தமிழ் மக்களிடம் நாங்கள் உங்கள் பிரதிநிதி என்று கூறியும் இரட்டை வேடம் அணிந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களிடம் உள்ள வாக்கு வங்கியை சரியாமல் காப்பாற்றி கொள்ளவும் அடிகடி இந்தியா சுற்றுலா சென்று வரவும், இந்தியாவிடம் இருந்து உதவிகளுக்காகவும் காத்திருகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆக மொத்தத்தில் இப்பேச்சு வார்த்தையானது இலங்கை அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடைப்பட்ட நலன், தேவைகள், உடன்பாடுகள் சம்மந்தப்பட்டே நடைபெறுகின்றதே தவிர தமிழ் மக்களின் நலன், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டதாக அமையவில்லை என்பதே உண்மை.

தமிழ் மக்கள் மீண்டும் ஒருதடவை ஏமாற காத்துக்கொண்டிருக்கின்றனர்K.சிவதர்ஷன்
கணணி பிரயோகவியல் மாணவன்

Sunday, March 13, 2011

ஆழிப்பேரலை...(சுனாமி) ஜப்பான்...2011
இரண்டாம் உலக போருக்கு பிறகு, உலகம் உச்சரிக்கும் பெயராக மார்ச்..11ம் தேதி ஜப்பான் மாறிப்போகும் என்று காலையில் எழுந்து பல் துலக்கும் போது  எந்த ஜப்பானியர்களும் நினைத்து  கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும்  போது வெள்ளம் வந்தால் அது ஒரு பிரச்சனையே இல்லை.... மழை கொட்டிக்கொண்டு இருக்கின்றது அதனால் படிப்படியாய் வெள்ளம் என்று மனது சமாதனபட்டு விடும்...


 காலையில் நல்ல வெயில்... சென்னை மயிலாபூரில் காபாலியை சேவித்து விட்டு  வெளியே வந்தால்  15 அடிக்கு மேல தண்ணீர்  வேகமா வந்த கொண்டு இருந்தால்  சிவ சிவ இந்த லோகத்துக்கு போறாதகாலம் வந்துடுச்சி என்று உயிர்பிழைக்க ஓடுவோம் இல்லையா ??? அது போலதான் ஜப்பானிலும் வந்து இருக்கின்றது... நொடியில்  நகரம் வெள்ளக்காடாக மாறி விட்டடது...


யாரோ ஒரு நண்பர் அவர் பெயர் கூட எனக்கு தெரியாது.. எனக்கு எந்த நிகழ்வு நடந்தாலும் பிளாஷ்செய்தி என்று தலைப்பிட்டு வரும்....  அப்படித்தான் அந்த செய்தி எனக்கு வந்தது... முதலில் பூகம்பம் அதனால் சுனாமி என்ற அளவில் அதன் மேல் கவனம் வைத்தேன்..ஆனால் உடனே சன் செய்திகளில் சுனாமி பற்றி வீடியோ ஒளிபரப்புவதாக செய்தி வெளியாக...அதனை பார்த்த போது எனது  நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது...


கார்கள் பொம்மைகார்களாக மாறிவிட்டன... கப்பல்கள் காகிதகப்பலாக மாறி தண்ணீரில் தத்தளித்து  கொண்டு இருந்தன..

ஜப்பானியர்களுக்கு பூகம்பமோ சுனாமியோ அவர்களுக்கு  பெரிதான பயத்தை உண்டு பண்ணாது.. காரணம் அது போல பல இயற்க்கை எரிச்சல்களை அவர்கள் பார்த்து அதனோடு போட்டி போட்டு மனதிடத்தோடு வாழ்ப்வர்கள்...

பூகம்பம் வந்தால் நாம் வீட்டை விட்ட  வெட்ட வெளிக்கு வருவோம் ஆனால் ஒரு டிப்பார்ட்மேண்ட் ஸ்டோர் வீடியோவில் சில பணிப்பெண்கள் ரேக்கில் அடிக்கி வைத்த சரக்குகள் கீழே விழாமல் இருக்க பூகம்பத்தில் ஆடும்  ரேக்கை பிடித்துகொண்டு இருந்தார்கள்..

முதலில் இறப்பு எண்ணிக்கை 300  என்றார்கள்... ஆனால் வீடியோவை பார்த்த போது அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று  தோன்றியது.. முதலில் அது குப்பை என்று நினைத்தேன்.. கேமரா ஜும் ஆன போது  அதில் நிறைய  கார்கள் மிதந்துக்கொண்டு இருந்தன...

ஏர்போர்ட் ரன்வேயில் பிளேன் இறங்குவதை பார்த்து இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு ஜலவேகத்தை பார்த்து இருக்கமாட்டார்கள்....

ஒரு மழை பெய்கின்றது அதன் காரணமாக வெள்ளம்... நன்றாக தெரியும்... ஆனால் வானம் நன்றாக இருக்கின்றது.. ஆனால் பல ஏக்கர்  விமான நிலையம் சடுதியில் தண்ணீரில் முழ்குவது வாய்ப்பே இல்லாத செயல் அல்லவா?


1900ம் ஆண்டு வந்தது போல அடுத்து வந்த பெரிய ஆழிப்பேரலை இதுவே...1300 பேருக்கு மேல் இறந்து போய் இருக்கின்றார்கள்... 2லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்...

ஜப்பான் பிரதமர் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்....
பேராலையில் கார்களோடு குட்டி விமானங்களும் மிதந்து கொண்டு இருந்தது  அந்த காட்சியை பார்க்கும் போது இந்த உலகில் எதுவும் நடக்கலாம் என்று  சொல்லியது...

 மூன்று ரயில்கள் பேரலையில் காணமல் போனதாக தகவல் இரயில்சேவை நிறத்தப்பட்டு விட்டன...இரயிலில் பயணித்த  பொதுமக்கள் எல்லோரும் ரயில் பாலத்தில் நடந்தே தங்கள் இருப்பிடத்தை நடந்து அடைந்தனர்...100 பேர் பயணம் செய்த கப்பல் நிலை பற்றி தகவல் இல்லை....

நல்லவேளையாக சுனாமி எச்சரிக்கை காரணமாக நான்கு அணு உலையையும் மூடி இருக்கின்றார்கள். உலக நாடுகள்  உதவிக்கரம்  நீட்டி இருக்கின்றன....
இபபோது உள்ள நிலவரப்படி சுத்தமான குடிநீர் யாருக்கும் இனும் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்கள்..
நம்ம ஊரில் சுனாமி வந்த போது  நமக்கு இவ்வளவு வீடியோ புட்டேஞ் கிடைக்கவில்லை.. காரணம் நமக்கு அது பற்றிய புரிதல் அப்படி இல்லை...ஆனால்  ஜப்பானில் நிறைய புட்டேஜ்கள்... அவர்கள் எல்லா இடத்திலும் குளோஸ் சர்குயிட் கேமரா வைத்து இருக்கின்றார்கள.. அது மட்டும் அல்ல...  ஹெலிகாப்டரில் இருந்து ஷாட் எடுத்தது போல பல காட்சிகள் கிடைத்து இருக்கின்றன...

ஆனால் இதுவரை கேமரா பார்த்து, எந்த ஜப்பானியனும் என் உடமைகள் அழிந்து போய்விட்டன.. அரசாங்கம் எங்களுக்கு எதாவது செய்யனும்... என்று கோரிக்கை வைக்கவில்லை.. ஒரு வேளை லோக்கல் சேனல்களில் தங்கள் கோரிக்கையை  சொல்லி இருப்பார்களோ???


 சரி எது  எப்படி இருந்தாலும் இறந்து போன ஆன்மாக்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்...உலகில் அவர்கள் தன்னம்பிக்கைக்கு ஈடு இணையில்லை.. அது தெரிந்த விஷயம்... அதனால் இயற்கை அவர்களையே வஞ்சித்து கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்...????