இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Saturday, March 26, 2011

மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை. த.தே.கூ - இலங்கை அரசு

 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இலங்கை அரசகும் இடையிலான பேச்சு வார்த்தை கடந்த ஜனவரியில் இருந்து நடை பெறுவது யாவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் என்ன நடக்கின்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி இலங்கை அரசும் சரி இதுவரை என்ன விதமான பேச்சுகளை முன்னெடுக்கின்றது என்பதை தெரிவிக்காமல் தங்கள் அரசியலை முன்நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மா.வை.சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் இலங்கை அரசு சார்பில் நிமால் ஸ்ரீபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், ரத்னா ஸ்ரீ விக்கிரமநாயக ஆகியோரும் பேச்சு வார்த்தையை முன்னெடுக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு கொள்வதும், பேச்சு வார்த்தை பற்றி தமிழ் மக்களுக்கு கருத்து தெரிவிக்காததையிட்டு ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தில் இருப்பதாகவும் தவல்கள் கசிந்துள்ளது.

இலங்கை அரசானது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேச்சு வார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவருடனும் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கு முட்டுக்கட்டையாக டக்ளஸ் தேவானந்தாவை வைத்து காய்களை நகர்த்தி வருகின்றது இலங்கை அரசு. இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளின் படி எவ்விதமான உருப்படியான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே உண்மை. இப்பேச்சு வார்த்தை தொடங்கும் போது மாதம் இரு கூடி ஆராய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இரண்டு தடவைகள் மாத்திரமே இப்பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. முதல் பேச்சு 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மொத்தமாக இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் 2,3 மணி நேரம் தான் இடம்பெற்றது. 30 வருடத்திற்க்கு மேற்பட்ட உரிமை போராட்டத்ததை 2,3 மணி நேரத்தில் பேசி முடிக்க நினைத்தார்களோ என்னவோ...!!


இப்பேச்சு வார்த்தை முலம் இலங்கை அரசுக்கு என்ன இலாபம்...?

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக சர்வதேசத்துக்கு காட்டி நற்பெயரையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும் போக்க அரசு முனைப்பு காட்டுகின்றது. அந்த வகையில் மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்க தூதுவரை சந்தித்த போது இதனை பெரிய விடயமாக எடுத்து கூறியதும், போருக்கு பின் நல்லிணக்க முயற்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஐக்கிய நாடுகள் செயலரிடம் எடுத்து கூறியும், ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திலும் இது பற்றி கூறியும், இந்தியாவிடமும் அப்படியே கூறியும் தன் மீதுள்ள களங்கத்தை போக்கியும், அபிவிருத்திக்காக கடன்களை பெறவும் இலங்கை அரசு முனைகிறது.இப்பேச்சு வார்த்தை முலம்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்ன இலாபம்...?

இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், தமிழ் மக்களிடம் நாங்கள் உங்கள் பிரதிநிதி என்று கூறியும் இரட்டை வேடம் அணிந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களிடம் உள்ள வாக்கு வங்கியை சரியாமல் காப்பாற்றி கொள்ளவும் அடிகடி இந்தியா சுற்றுலா சென்று வரவும், இந்தியாவிடம் இருந்து உதவிகளுக்காகவும் காத்திருகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஆக மொத்தத்தில் இப்பேச்சு வார்த்தையானது இலங்கை அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடைப்பட்ட நலன், தேவைகள், உடன்பாடுகள் சம்மந்தப்பட்டே நடைபெறுகின்றதே தவிர தமிழ் மக்களின் நலன், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டதாக அமையவில்லை என்பதே உண்மை.

தமிழ் மக்கள் மீண்டும் ஒருதடவை ஏமாற காத்துக்கொண்டிருக்கின்றனர்K.சிவதர்ஷன்
கணணி பிரயோகவியல் மாணவன்

No comments:

Post a Comment