இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, January 10, 2011

கிழக்கின் தற்போதைய நிலை - புகைப்படங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விமானப் படையினர் இன்று ஹெலிகொப்டர் மூலம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  பொ.பியசேன அவர்கள் பெரியநீலாவணை, காரைதீவு, கல்முனை பிரதேசங்களுக்கு சென்று வெள்ள நிலைமைகளை பார்வையிட்டதாகவும் நிவாரண உதவிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்துக்கு வெள்ள நிலைமைகளை பார்வையிட பட்டிருப்பு ஊடாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படவிருந்தவேளையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதே வேளை...

வாழைச்சேனையில் இருந்து வாகரைக்கு பனிச்சங்கேணி பாலம் ஊடாக சென்ற நால்வர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                          நிவாரண பணிகளில்

                                                   மட்டு நகர் பேருந்து தரிப்பிடம்

                                மட்டு - கல்முனை சாலையில் ஏற்பட்டுள்ள தடை

                                 மட்டு - கல்முனை சாலையில் ஏற்பட்டுள்ள தடை

                                                                     கல்முனை

                                                       மட்டு - கல்முனை சாலை

                                                 மட்டு நகர் பேருந்து தரிப்பிடம்

                                             புகையிரத நிலையம் - மட்டக்களப்பு


                                                       மட்டு - கல்முனை சாலை
                                                      மட்டு - கல்முனை சாலை

                                                கல்முனை அம்மன் கோவில் வீதி 

                                                                      கல்முனை


                                      கல்முனை பிரதேச செயலகம்  - தமிழ் பிரிவு

                                      கல்முனை பிரதேச செயலகம்  - தமிழ் பிரிவு
                                                கல்முனை அஞ்சல் அலுவலகம்

                                                    இலங்கை வங்கி - கல்முனை
                                                             கல்முனை கச்சேரி


                                                              கல்முனை கச்சேரி

                                                      மட்டக்களப்பு சிறுவர் பூங்கா

                                           மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதி

                                                     மட்டக்களப்பு சிறுவர் பூங்கா

                                                   மட்டக்களப்பு பஸ் நிலையம்
                               வைத்தியசாலை & வவுணதீவு சந்தி - மட்டக்களப்பு
                                                                   Food City Road

                                                      உறணி சந்தி - மட்டக்களப்பு
                                                     உறணி சந்தி - மட்டக்களப்பு
                                                      உறணி சந்தி - மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் 5 தினங்களுக்கு மூடப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நேற்றைய தினம் அறிவித்தார்.

படப்பிடிப்பு - Vinod.S

No comments:

Post a Comment