இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Wednesday, October 24, 2012

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் அழகான புகை படங்கள்.


அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் அழகான புகை படங்கள்.

இப்பதிவின் மூலம் யாரையும் ஆபத்தான கடல் பயணத்தை துண்டுவதட்கல்ல.
எமது நாட்டவர் ஆபத்தான கடல் பயணங்களையும் தாண்டி இங்கே தான் சென்று அடைகின்றார்கள் என்பதை தெரிவிப்பதே எனது நோக்கம்.

இதன் பரப்பு 135 sq km
பயன்பாட்டில் உள்ள மொழி ஆங்கிலம்
மக்கள் தொகை 2415

இத் தீவுக்கு தெற்கே 190 மைல்களில் இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரம்
வடமேற்காக 2200 மைல்களில் இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள கல்முனை நகரமும் அமைந்துள்ளது.

இங்கே
ஒரு தேசிய பூங்கா ஒன்றும் உள்ளது.










Saturday, September 22, 2012

உலகம் முழுவதும் சக்கைபோடு போடுகிறது "ஓபின் கங்க்னம் ஸ்டைல் பாடல்"

கொலைவெறி பாடல், தனது அனைத்து வெர்ஷனும் சேர்த்து யூடியூபில் 100 மில்லியன் பார்வையை பெற்றிருக்குமா?அதை தாண்டி 192 மில்லியன் பார்வைகளுடன் உலகம் முழுவதும் சக்கைபோடு போடுகிறது கொரியன் ஒருவரின் "ஓபின் கங்க்னம் ஸ்டைல்" (GANGNAM STYLE) பாடல்.ஒருதடவை பார்த்தவுடனேயே பசக் என்று மனதில் ஒட்டிவிடுகிறது " Psy 'இன் பாடலும் அவரின் நடனமும்!!இன்னமும் பல சாதனைகளுடன் எல்லோர் மனதிலும் சக்கை போடப்போகிறது இந்த கன்னம் ஸ்டைல் பாடல்..! ஒருதடவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.


"ஓபின் கங்க்னம் ஸ்டைல்" (GANGNAM STYLE) பாடல்.உருவான விதம்

 

Saturday, September 15, 2012

மதவாதம் வேண்டாம் - யாரையும் புண்படுத்தவும் வேண்டாம்

இது தான் தற்போது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களை வேதனையில் ஆழ்த்தியுள்ள திரைப்படம்.

இத்திரைப்படத்தில் இறை தூதரான நபிகள் அவர்களை இழிவு படுத்தும் விதத்தில், அமெரிக்க பாதிரியார் மற்றும் இஸ்ரேலியர் ஒருவரினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தில் இருந்து சில பகுதிகள்.


இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை பதிவிடவில்லை. மத வெறியர்களை பாருங்கள். இச்செயலால் கிறிஸ்தவ சமூகத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்கின்றனர். இப்பதிவு தவறு என்றால், பின்னுட்டத்தில் தெரிவியுங்கள். பதிவு அகற்றப்படும்.

Monday, August 6, 2012

Recycle Bin இல் அழித்த கோப்புக்களை மீட்பதற்கான வழிமுறைகள்..

நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக Delete செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம். Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.


இணையதள முகவரி
கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும்.
இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம்.
பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.

Sunday, June 24, 2012

தமிழர் வரலாறு -Tamils History

தமிழர் வரலாறு -Tamils History
கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

Thursday, May 31, 2012

அகராதிகள் (இணையத்தில் மட்டுமே பயனாகுபவை)

*** தேவையான அகராதியின் படத்தில் சொடுக்கவும் *** 

கூகிள் தமிழ் - ஆங்கில அகராதியான இதில் சொற்களைத் தமிழில் 
தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் 
தோன்றுகிறது. சொற்களுக்குரிய பொருள் சொற்களாகவும், 
தொடர்களாகவும் தோன்றுவதால் மாணவர்களுக்குத் தொடர்கள் 
உருவாக்குவதற்குரிய அடித்தளத்தை இந்த அகராதி ஆக்கும்










ஒருங்குறி தமிழில் தட்டச்சு செய்தால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் வருகிறது. அச்சொல்லுக்குரிய பல பொருள்களைத் தருவது இதன் சிறப்பு. தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும். சொல்லுக்குரிய
பொருளை அறிந்து உள்வாங்க இந்த அகராதி உதவும்.











இதில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய ஆங்கிலப் பொருள், தமிழ்ப் பொருள் இரண்டும் விளக்கத்துடன் தோன்றுகிறது, அதுமட்டுமல்லாமல் இந்தச் சொல் உள்ள பாரதியார், திருவள்ளுவர், ஔவையார் பாடல் வரிகளையும் காட்டுகிறது. திரைபடப் பாடல் வரிகளையும் காட்டுகிறது. மேல் பகுதியில் தட்டச்சு செய்து சொடுக்கினால் கீழே பொருள் உள்ள பக்கம் உருவாகுகிறது. தமிழ்ச் சொற்களிலிருந்து தொடர்களை உருவாக்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும்.










இந்த அகராதியில் தமிழ் / ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால், அதற்குரிய பொருள் புதிய பக்கத்தில் உருவாகிக் காட்சி தரும். இதில் சொற்களின் முன் மற்றும் பின் ஒட்டுகளுடன் சொற்கள் உருவாகுவதால் மாணவர்களுக்கு இது சொற்களஞ்சியம் பெருக்க உதவும்.










60 க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்தாலும் அதனை மொழிமாற்றம் செய்யப் பயனாகுகிற அரிய அகராதியை கூகிள் வடிவமைத்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை முறைப்டுத்திக் கொண்டு ஒருங்குறியில் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய மொழி மாற்றத்தை உடனடியாக அருகிலுள்ள கட்டத்திற்குள் காட்டுகிறது. தமிழ் மொழியையும் இந்த மொழிமாற்ற மென்பொருளில் இணைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே.
மாணவர்கள் தாங்கள் விரும்புகிற சொற்களை வலது புறத்தில் உள்ள கட்டத்தினுள் தட்டச்சு செய்து சொடுக்கினால் இடது புறத்தில் அதற்கான தமிழ்ச் சொல் தோன்றும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்தச் சொற்களை இது படித்தும் காண்பிக்கும். முதல் நிலை மாணவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.










இந்தத் தமிழ் லெக்சிகன் அகராதியில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய பொருள் தோன்றுகிறது. வேர்சொல்லில் அமைந்த வேறு வேறு பொருளுடைய சொற்களையும் இணைத்துள்ளது. ஆய்வாளர்களுக்குப் பயனாகுகிற வகையில் அமைந்த அகராதி இது.










அகராதியில் உள்ள பட்டியலின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து, அந்த எழுத்தில் இணைக்கப்பட்டுள்ள சொற்களைச் சொடுக்கினால் அதற்குரிய பொருள் வருகிறது. மாணவர்களுக்குப் பயனாகும் அகராதி இது.










அகராதியில் உள்ள இடத்தில் ஆங்கிலத்தில் சொற்களைத் தட்டச்சு செய்து தேடினால், அந்தச் சொல்லுக்கான பொருள் தோன்றுகிறது. மாணவர்களுக்கும் பயனாகும் அகராதி இது.










Monday, May 7, 2012

பொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்.

  •  
 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை மற்றும் சகல போட்டி பரீட்சைகளுக்கும் இப்புத்தகங்கள் உதவலாம்.

ஒரு நண்பியின் பரீட்சைக்காக இணையத்தில் பொதுச் சாதாரணப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை தேடிய போது கிடைத்த புத்தகங்களும், வினாத்தாள்களும்.
தேடல்கள் தொடரும், தொடர்ந்து இணைந்திருங்கள்.