இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Saturday, January 8, 2011

IPL 4 - 2011 ஏல விபரம்

ஐபிஎல் சீஸன் 4 போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் இன்று ஏலம் எடுத்தன. இதில் அதிகபட்சமாக கவுதம் கம்பீருக்கு ரூ 11.04 கோடி தரப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) அவரை ஏலம் எடுத்துள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

வீரர்கள் ஏலம் முறையில் அணிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதால் இந்தப்போட்டிக்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்குகிறது.
இதில் கூடுதலாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டுள் ளன. இதனால் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களின் ஒப்பந்தம் முடிந்தது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் விருப்பம் உள்ள வீரர்களில் 4 பேரை நீட்டித்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். அமைப்பின் விதியில் தெரிவிக்கப் பட்டது.
இதன்படி சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பிமார்கல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரும், மும்பை அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், போலாட் (வெஸ்ட் இண்டீஸ்), மலிங்கா  ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். வார்னே, வாட்சனை ராஜஸ்தான் அணியும், ஷேவாக்கை டெல்லி அணியும், வீராட் கோக்லியை பெங்களூர் அணியும் நீட்டித்துள்ளது. மொத்தம் 12 வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.

4-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடக்கிறது. மொத்தம் 350 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தொகை ரூ.40.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புதிய அணிகளான கொச்சி, புனே ஆகிய 5 அணிகளும் ரூ.40.5 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை, மும்பை அணி ஏற்கனவே தலா 4 வீரர்களை ரூ.20.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் அந்த 2 அணி களும் ரூ.20.25 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

ராஜஸ்தான் அணி ரூ.25.6.கோடி வரைக்கும், டெல்லி டேர்டேவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ரூ.32.4 கோடி வரைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தம் ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்.

இன்றைய ஏலம் (08.01.2011)

இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ 11.04 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி(கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது.
இதே அணி யூசுப் பதானை ரூ 9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ 9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ராகுல் திராவிடை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ 2.26 கோடிக்கும், ஆடம் கில்கிறிஸ்டை பஞ்சாப் லெவன் 4.08 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
ஜாக் கல்லிஸை ரூ 5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஆஸ்கிரேலியாவின் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் ரூ 3.85 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
இலங்கை கேப்டன் சங்ககார வை ரூ 3.17 கோடிக்கு டெக்கான் சார்ஜர்ஸ் ஏலம் எடுத்தது.
யுவராஜ் சிங்கை புனே வாரியர்ஸ் ரூ 8.28 கோடிக்கும், மஹேல ஜெயவர்தனாவை கொச்சி அணி ரூ 6.75 கோடிக்கும் ஏலம் எடுத்தன. ஏ பி டிவில்லியர்ஸை விஜய் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ 5.06 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜகீர் கானை இதே அணி ரூ 4.14 கோடிக்கு எடுத்துள்ளது.
நியூஸிலாந்து வீரர் ரோஸ் டெய்லரை ரூ 4.6 கோடிக்கு எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இர்பான் பதானை டெல்லி டேர் டெவில்ஸ் ரூ 8.62 கோடிக்கு எடுத்துள்ளது.
பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் பிரிட்டிஷ் நிபுணர் முன்னிலையில் நடந்த இந்த ஏலம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

செளரவ் கங்குலியை முதல் சுற்று ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.
ஏலம் தொடர்கிறது….

வீரர்கள் விலை முழு விவரம் :
தற்போது நிலவரப்படி இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு :


சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஆர் ஆஸ்வின் 850,000 அமெரிக்க டாலர்
எஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டாலர்
டோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டாலர்
மைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டாலர்
ட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டாலர்
விரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டாலர்

டெக்கான் சார்ஜர்ஸ்

டேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்
கேமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
குமார் சங்ககாரா 700,000 அமெரிக்க டாலர்
கெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டாலர்
ப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டாலர்
இஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டாலர்
அமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டாலர்
ஜே பி டூமினி 300,000 அமெரிக்க டாலர்
ஷிகார்தவான் 300,000 அமெரிக்க டாலர்

டில்லி டேர்டெவில்ஸ்

இர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டாலர்
டேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டாலர்
மொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டாலர்
ஆரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டாலர்
நாமன் ஓஜா 270,000 அமெரிக்க டாலர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டாலர்
தினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டாலர்
பியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டாலர்
அபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டாலர்
பீரவீன் குமார் 800,000 அமெரிக்க டாலர்
ஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டாலர்
ரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டாலர்

கொச்சி

மகிலா ஜெயவர்த்தனா 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்
முத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டாலர்
ஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டாலர்
ஆர் பி சிங் 500,000 அமெரிக்க டாலர்
ப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டாலர்
பிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டாலர்
வி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டாலர்
பார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டாலர்
ஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டாலர்
ரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டாலர்

கோல்கட்டா நைட் ரைடர்ஸ்

கவுதம் காம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்
யுசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
காலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
மனோஜ் திவாரி 475,000அமெரிக்க டாலர்
ஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டாலர்
பிரட் லீ 400,000 அமெரிக்க டாலர்
யோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டாலர்
பிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டாலர்

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டாலர்
டேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டாலர்

புனே வாரியர்ஸ்

ராபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
யுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆங்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டாலர்
ஆசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டாலர்
கிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டாலர்
காலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டாலர்
டிம் பெயின் 270,000 அமெரிக்க டாலர்
நாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டாலர்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டாலர்
ராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டாலர்
பால் காலிங்வுட் 250,000 அமெரிக்க டாலர்

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்
ஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜாகிர் கான் 900,000 அமெரிக்க டாலர்
புஜாரா 700,000அமெரிக்க டாலர்
திர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டாலர்
தில்ஷான் 650,000அமெரிக்க டாலர்
டேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டாலர்

Tuesday, December 28, 2010

கிழக்கில் கொட்டுகிறது அடை மழை.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கொட்டிய மழையால் மக்கள்  பாடசாலைகளிலும் கோவில்களிலும் இடம் பெயர்ந்து உள்ளனர்.


வீதிகளில் நடமாட முடியாத  அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்க சமூக ஆர்வலர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, December 27, 2010

ஸ்கைப்க்கு நடந்தது என்ன.....?

சில நாட்களாக பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா....?
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல...!
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வெகு விரைவில் வழமைக்கு திரும்பும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா வான் தாக்குதல் 18 பேர் பலி

இன்று அதிகாலை (27.12.2010)  ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியமான வஸிரிஸ்தானில் ஐ.நா.வின் அனுமதிக்குப் புறம்பாக இடம்பெற்ற அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 18 பாகிஸ்தானியப் பொதுமக்கள் பலியானார்கள்.


அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது ஐந்து ஏவுகணைகள் எறியப்பட்டதாகவும், வடக்கு வஸிரிஸ்தானின் மீர் அலி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய வான்வழி ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாலிபான் படையணியினரை இலக்காகக்கொண்டே இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வாஷிங்டன் தெரிவித்துள்ள போதிலும், இத்தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவத்தைப் பாகிஸ்தானியப் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய நியாயமற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் ஏராளமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளார்.

Thursday, December 23, 2010

விக்கிலீக்ஸினால் ஏற்படபோகும் இன்னுமோர் உலக மகா யுத்தம்.



அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் உருவாக்கிவிட்டிருக்கும் பரபரப்பு இன்னும் தணியவில்லை.விக்கிலீக்ஸிற்கும் அதன் நிறுவுனர் Julian Assange ற்கும் ஆதரவாகவும் எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டின் உள்விவகார தகவல்களை திருடுவது. அதனை வெளியிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போதைய சுழல், எல்லையற்ற இணையம்,கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் Wikileaks ற்கும் அதன் நிறுவுனரிற்கும் ஆதரவான குரல்களும் , இதனைத் தொடர்ந்து அனுமத்தித்தால் நாடுகளின் இரகசிய உள்வீட்டுத் தகவல்கள் எல்லாம் வெளிப்படைத் தன்மையின் பெயரால் சென்றடையக் கூடாதவர்களிற்கெல்லாம் சென்றடைந்து தீவிரவாதிகளை ஊக்குவிக்கும், இறுதியில் நாடுகளிடையில் குழப்பங்களை உருவாக்கி இன்னுமோர் உலக யுத்தத்திற்கு வழிவகுத்துவிடும் Wikileaks ற்கும் நிறுவுனர் Assange ற்கு எதிரான குரல்களும் பரவலாக  எழுந்தவாறுள்ளன.
இலங்கை சமந்தமான 3000 தகவல்களும் உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

எது எப்படியோ தீவிரவாதிகளுக்கு நிறையவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

Tuesday, December 21, 2010

" இன்னும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை " - மகிந்த ராஜபக்ஷ" - இன்னும் முடியலையா...!!!

  இலங்கை குறித்த எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்க அரசாங்கத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் தியத்தலாவையில் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 253 உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு வைபவம் தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


“என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி அப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் தான் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக அர்த்தம்.
யுத்தத்தால் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும் போராடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்” என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில்....
நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்களுக்கு இராணுவத்தினர் உட்பட்டவர்கள். இந்த நிலையில் இராணுவத்தினர் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகளையும் அவர்கள் அனுபவித்துத் தானாக வேண்டும்.
அதற்காகப் பழிவாங்கும் எண்ணத்துடன் மனிதாபிமானத்துக்கு எதிராக எவருக்கும் தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்னார்.

Monday, December 20, 2010

அமெரிக்காவின் போர் குற்றங்கள்....! இதை யாரு கேட்பார்கள்.....?

http://www.youtube.com/watch?v=kelmEZe8whI&feature=player_embedded

- அமெரிக்காவின் போர் குற்றங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் -

ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவரையும் ஆயுத தாரிகள் என பொதுமக்களுடன் சேர்த்து விமானத்தில் இருந்து சுட்டுத்தள்ளும் காட்சிகளும் மனதை பதற வைக்கின்றன. ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. எனினும் விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை உலகத்தின் பார்வைக்கு கடந்த ஏப்ரலிலியே வைத்திருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் நேரடி சாட்சியமளிப்பும் இருக்கிறது.


சாட்சியம் அளிப்பில் மேலும்....
          "யாராயின் நீங்கள் கண்டு அஞ்சுபவரை சுடலாமென அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆயுதங்களை கையில் வைத்திருக்கும் அனைவரையும் அச்சம் தருபவர்களாகவே இருந்தார்கள் அனைவரையும் சுட்டோம்.

"360 டிகிரியில் சுழற்சியாக கண்டவர்களை எல்லாம் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டோம்."

வீதிகளில் காணுபவர்களை எல்லாம் சுட உத்தரவு பிறப்பித்தார்கள். இது தினமும் நடந்தது. வான் ஒன்றில் குழந்தைகள் மற்றும் அங்கிருந்தவர்களையும் விமானத்திலிருந்தே சுடப்பட்டதையும் நான் நேரிலே கண்டேன்.

அவர்கள் மீண்டும் மீண்டும் சுடப்பட்டதை நான் கண்டேன். வான் இற்கு அருகில் சென்றதும் 7வயது சிறுவன் உள்ளே. முன்பக்கத்தில் அவனது தந்தை தப்பித்திருக்க சந்தர்ப்பமே இல்லை ஒரே இரத்த வாடை. மேலும் உள்ளே இருந்த மற்றொரு சிறுமி காயப்பட்டிருந்தால் அவளுக்கு மருத்துவ உதவியை கோரினேன்.

மீண்டும் வானுக்கு அருகில் வந்தேன் சிறுவன் அசைவதை பார்த்ததும் சிறுவனும் உயிருடன் இருக்கிறான் என கத்தினேன்.

என்று தொடர்கிறது அவரது வாக்குமூலம்